மரண அறிவித்தல்

திருமதி கணேசு செல்லமுத்து (பவானி)

தாய் மடியில் : 10, Sep 1951 — இறைவன் அடியில் : 29, Aug 2022வெளியிட்ட நாள் : 01, Sep 2022
பிறந்த இடம் - வேலணை புளியங்கூடல் Srilanka
வாழ்ந்த இடம் - புத்தளம் சிலாபம் Srilanka
யாழ். ஊர்காவற்துறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், புத்தளம் சிலாபத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கணேசு செல்லமுத்து அவர்கள் 29-08-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சொக்கலிங்கம், பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சொக்கலிங்கம் கணேசு அவர்களின் அன்பு மனைவியும்,கவிதா, கயல்விழி, காண்டீபன், காந்தரூபன், கயூரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,சுபேந்திரன், சுகிந்தா, நிரோசினி, தர்ஷிகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,பிரதாயினி, பிரபாலினி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,பிரனீத், பிரகதீஷ் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,இராசாம்பாள், நீலாம்பாள், இந்திரா, கனநாதன், பாலசுப்பிரமணியம், சந்திரன், மகேந்திரன், இராசையா, சொர்ணகாந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்ற சண்முகலிங்கம், பஞ்சாட்சரதேவி, நாகராசா, பாலசுப்பிரமணியம், ஆறுமுகராசா, புஷ்பராணி, குமுதினி, யோகாம்பாள், ராதிகா, சகுந்தலா, காலஞ்சென்ற இரவிச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,பிறேமாவதி, காலஞ்சென்ற தவநாகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகலியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-09-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் சிலாபத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 03:00 மணியளவில் சிலாபம் கத்தோலிக்க பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
தகவல் தகவல் பெறாமகன் : சண்முகலிங்கம் வாகீசன்