மரண அறிவித்தல்

திரு. ஆறுமுகம் பரமேஸ்வரன் (ஈசன்)

தாய் மடியில் : 08, Nov 1945 — இறைவன் அடியில் : 15, Apr 2022வெளியிட்ட நாள் : 16, Apr 2022
பிறந்த இடம் - சாவகச்சேரி மட்டுவில்
வாழ்ந்த இடம் - கிளிநொச்சி வட்டக்கச்சி
சாவகச்சேரி மட்டுவிலை பிறப்பிடமாகவும் இல 223, சில்வா வீதி வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொண்ட கரைச்சி பிரதேசசபையின் ஓய்வு பெற்ற சுகாதார மேற்பார்வையாளருமான திருவாளர் ஆறுமுகம் பரமேஸ்வரன் (ஈசன்) அவர்கள்  (15.04.2022 ) ம் திகதி  வெள்ளிக்கிழமை  இறைபதம் அடைந்து விட்டார்.
  
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு திருமதி ஆறுமுகம் செல்லம்மா  தம்பதிகளின் அன்பு மகனும்  காலஞ்சென்றவர்களான திரு  திருமதி
தம்பிரத்தினம் நாகம்மை  ஆகியவரின் அன்பு மருமகனும் ஒய்வு பெற்ற கரைச்சி பிரதேசசபையின் சித்த ஆயுர் வேத வைத்தியசாலை பொறுப்பு வைத்தியர் திருமதி  ப.சித்திராதேவி (சித்திரா) அவர்களின் பாசமிகு கணவரும் ஆவார்.

திருமதி ஜனனி (அவுஸ்ரேலியா), திருமதி க.ஆரணி (சித்த ஆயுர் வேத வைத்திய நிலையம்  திருவையாறு  கிளிநொச்சி) திரு.ப.கஜன் (கனடா) திருமதி து.நிலானி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்

காலஞ்சென்ற மகேஸ்வரி, காலஞ்சென்ற மகேஸ்வரன், காலஞ்சென்ற பரமேஸ்வரி, காலஞ்சென்ற ஞானேஸ்வரி, திருமதி இராயேஸ்வரி மட்டுவில், திருமதி நகுலேஸ்வரி மட்டுவில், விக்னேஸ்வரன் மட்டுவில் ஆகியோரின் சகோதரரும் கிசோக்குமார் (அவுஸ்ரேலியா) கணேசராஜன் கிளிநொச்சி (கிழக்கு நீர்பாசன திணைக்களம்) துசியந்தன் (பிரான்ஸ்) ஹம்ஸாயினி (கனடா) ஆகியோரின் மாமனாரும் லிபிசன் (அவுஸ்ரேலியா), டிலக்சன் (அவுஸ்ரேலியா) ஸ்ரீஷா (அவுஸ்ரேலியா)  துசிதன் (கல்கி பாமசி பொதுச்சந்தை கிளிநொச்சி) அமிர்தனா, அவினயா, பரதன், ஹரிஸ், காசினி, ஆஹாஸ் (பிரான்ஸ்) சஸ்வின், டியா (கனடா) ஆகியோரின்  பாசமிகு தாத்தாவும்  ஆவார்

அன்னாரின் இறுதிக் கிரியைகள்  இல 223  சில்வா வீதி வட்டக்கச்சியிலுள்ள  அவரது இல்லத்தில்  நடைபெற்று  தகனக்கிரிகைகளுக்காக மம்பில் இந்து மயானத்திற்கு  நாளை மாலை  (17.04.2022) 3 மணிக்கு எடுத்து செல்லப்படும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்..
தகவல்குடும்பத்தினர்