மரண அறிவித்தல்

திரு. பேரம்பலம் கந்தசாமி

தாய் மடியில் : 17, Dec 1949 — இறைவன் அடியில் : 23, Oct 2025வெளியிட்ட நாள் : 23, Oct 2025
பிறந்த இடம் - யாழ்.சாவகச்சேரி சரசாலை
வாழ்ந்த இடம் - யாழ். சாவகச்சேரி சரசாலை
சாவகச்சேரி, சரசாலை வடக்கினை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பேரம்பலம் கந்தசாமி அவர்கள் கடந்த (23.10.2025) வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பேரம்பலம் - தங்கமுத்து தம்பதியரின் மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகம் பூரணம் தம்பதியரின் மருமகனும், நகுலேஸ்வரியின் அன்புக் கணவரும், தவமணி, காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் (SPS மணியம்) ஆகியோரின் சகோதரரும், சுதர்சன், சுசித்திரா, காலஞ்சென்றவர்களான பிரபாகர், சகிதா ஆகியோரின் அன்புத் தந்தையும், நவிலகுமாரன், றஜிதா, வினோஜா ஆகியோரின் அன்பு மாமனாரும், நிருபன், லக்ஷா, றிவிசா, ஜெனிஸ்கா, கரிகாலன், விதுஜன், சந்தோஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (26.10.2025) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சரசாலை வடக்கு கொம்பிகுளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

சரசாலை வடக்கு,
சாவகச்சேரி.

தகவல்:
குடும்பத்தினர்
0094 768749221
தகவல்