இனிமேலும் தாமதிக்காமல் ஐ.நாவுடன் இணைந்து செயற்பட வேண்டும்! - சர்வதேச மன்னிப்புச் சபை

ஆசிரியர் - Admin
இனிமேலும் தாமதிக்காமல் ஐ.நாவுடன் இணைந்து செயற்பட வேண்டும்! - சர்வதேச மன்னிப்புச் சபை

இனிமேலும் தாமதிக்காமல், இலங்கை அரசாங்கம், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் இணை அனுசரணையுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 40(1) தீர்மானம் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப் பிராந்திய பணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் மூன்று தசாப்த காலமாகத் தொடர்ந்த யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக்குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பான செயற்பாடுகளின் முக்கியமானதொரு படிமுறையாக 40(1) தீர்மானத்தைக் கருதமுடியும். ஐ.நா தீர்மானத்தின் பிரகாரம் நிறைவேற்றப்பட வேண்டிய கடப்பாடுகளை குறித்த காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற காலவரையறை விதிக்கப்படாமை கவலையளிக்கின்றது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு