இலங்கையில் சமூக ஊடகங்களில் ஏற்பட்ட திடீர் கோளாறு!

ஆசிரியர் - Admin
இலங்கையில் சமூக ஊடகங்களில் ஏற்பட்ட திடீர் கோளாறு!

பிரபல சமூக வலைத்தளங்களான பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் வட்ஸ்அப் ஆகிய செயலிகள் பல்வேறு நாடுகளில் முடங்கியுள்ளன. நேற்று இரவு முதல் ஏற்பட்ட இந்த முடக்கம் நிலை சில நாடுகளில் தற்போதும் தொடருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த செயலிகள் மீது பாரிய வைரஸ் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் அதனை பேஸ்புக் நிறுவனம் மறுத்துள்ளது.இது வைரஸ் தாக்குதல் இல்லை என்பதனை எங்களால் உறுதியாக கூற முடியும், தொழில்நுட்ப கோளாரினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. கூடிய விரைவில் பாதிக்கப்பட்ட செயலிகள் வழமை நிலைக்கு கொண்டு வரப்படும் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தப் பிரச்சினை ஏற்பட்டு 6 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரமாகியுள்ளது. பல நாடுகளில் பேஸ்புக், மெசென்ஜர் மற்றும் இன்ஸ்ட்ராகிராம் போன்ற சமூக வலைத்தளங்களுக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் பேஸ்புக்கிற்குள் நுழைய முடிந்த போதிலும் அதற்குள் செயற்பட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

பேஸ்புக் உரிமை கோரும் வட்ஸ்அப் செயலியிலும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பயனர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

Radio
×