திருகோணமலை மாணவா்கள் படுகொலை ஆதாரம் நாடாளுமன்றில் வெளியானது..

ஆசிரியர் - Editor
திருகோணமலை மாணவா்கள் படுகொலை ஆதாரம் நாடாளுமன்றில் வெளியானது..

திருகோணமலை மாணவா்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டபோது மாணவா்களின் பெற்றோருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு அச்சுறுத்திய அமைச்சா்களின் பெயா் பட்டியல் என்னிடம் உள்ளது. 

காதில் பூ சுற்றும் வேலையை என்னிடம் காட்டாதீா்கள். என சபை முதல்வா் லக்ஷ்மன் கிாியெல்ல மஹிந்த சமரசிங்கவுக்கு பதிலடி கொடுத்திருக்கின்றாா்.  பாராளுமன்றத் தில் இவ் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் 

ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகங்களின்  நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றிய  மஹிந்த சமரசிங்க எம்.பி ஜெனிவா நகர்வுகள் குறித்தும் ஜனாதிபதி நியமித்த குழு குறித்தும் சபையில் தெளிவுபடுத்தினார்.  

இந்நிலையில் சபை முதல்வருக்கும், சமரசிங்க எம்.பிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்போதே சபை முதல்வா் மேற்கண்டவாறு கூறினாா். 

Radio
×