மன்னாரில் 700 கிலோ பாரை மீன்கள் கடற்படையினரால் பறிமுதல்!
மன்னார் பள்ளிமுனை மீனவரின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான 700 கிலோ பாரை மீன்களை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றையதினம் திங்கட்கிழமை(13-11-2017) மன்னார் பள்ளிமுனை கடற்பகுதிக்கு கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் இன்று காலை தொழில் முடிந்து திரும்பிய நிலையில் கரை திரும்பிய மீனவர் ஒருவரின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பாரை மீன்களை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மீனவர் இக்னேசியன் கருத்து தெரிவிக்கையில்..
தாம் சட்டவிரோத மற்ற முறையில் மீன்பிடியில் ஈடுபட்டதாகவும் திருக்கை வலை பயன்படுத்தியே மீன்டிபிடியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று காலை தான் பிடித்து வந்த மீன்கள் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்டதாக தெரிவித்து கடற்படையினர் பறித்து சென்றுள்ளதாக கூறினார்.
இதேவேளை மற்றுமொரு மீனவர் கருத்து தெரிவிக்கையில் .
...
இதுபோன்று கடற்படையினர் பல தடவைகள் மீன்களை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்தார்.
தாம் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடவில்லை என்றும் தெரிவிக்கும் குறித்த மீனவர் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.