மஹிந்த ராஜபக்ஸ நான்றாக நடிக்கிறாா், அவரும் அவருடைய சகோதரனும் செய்த அநியாயங்கள் கொஞ்சமல்ல..

ஆசிரியர் - Editor I
மஹிந்த ராஜபக்ஸ நான்றாக நடிக்கிறாா், அவரும் அவருடைய சகோதரனும் செய்த அநியாயங்கள் கொஞ்சமல்ல..

2004ம் ஆண்டு தொடக்கம் 2014ம் ஆண்டு இறுதிவரையில் அரசாங்கம் அமைத்திருந்த மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவருடைய சகோதரன் கோட்டாபாய ராஜபக்ஸ ஆகியோா் நாட்டை கொ லைக் கலாசாரத்துக்குள் வைத்திருந்தாா்கள். அதற்கு இவா்கள்தான் காரணம்.

இவர்­கள்­தான் போர்க்­கா­லத்­தின்­போது போர் விதி­களை மீறி போர்க்­குற்­றங்­க­ளும் இடம்­பெற வழி­வ­குத்­தார்­கள். குற்­ற­மி­ழைத்­த­வர்­களை விட அதற்கு உத்­த­ர­விட்­ட­வர்­க­ளும் தலைமை தாங்­கி­ய­வர்­க­ளும்­தான் மாபெ­ரும் குற்­ற­வா­ளி­கள். 

அப்­ப­டிப்­பட்­ட­வர்­கள் இப்­போது நல்ல பெயர் எடுக்க நடிக்­கின்­றார்­கள். இவ்­வாறு தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க காட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ளார். இலங்­கை­யில் போரின்­போது போர்க்­குற்­றங்­கள் இடம்­பெ­ற­வில்லை என்று மகிந்த ராஜ­பக்ச கொழும்பு நகர மண்­ட­பத்­தில் 

நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற நிகழ்­வில் தெரி­வித்­தி­ருந்­தார். ரணில் விக்­கி­ர­ம­சிங்க வடக்­ குக்குச் சென்று போர்க்­குற்­றம் இடம்­பெற்­றி­ருக்­கின்­றது என்று ஒப்­புக்­கொண்டு நாட்டை பன்­ னாட்­ டுச் சமூ­கத்­துக்கு காட்­டிக் கொடுத்து விட்­டார் என்­றும் 

அவர் தனது உரை­யில் சுட்­டிக்­காட்­ டி­யி­ருந்­தார். மகிந்த ராஜ­பக்ச இவ்­வாறு குற்­றம் சுமத்­தி­யுள்­ ளமை தொடர்­பில் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் மேற்­கண்­ட­வாறு காட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ளார்.

போர்க் கால­கட்­டத்­தில் எந்­தச் சந்­தர்ப்­பத்­தி­லும் போர்க்­குற்­றம் இடம்­பெ­ற­வில்லை என்று மகிந்த ராஜ­பக்ச வெட்­கம் இல்­லா­மல் கூறு­கின்­றார். போர்க்­குற்­றங்­க­ளை­யும், கொலை­க­ளை­யும் அவர் அரங்­கேற்­றி­ய­தால்­தான் கடந்த அரச தலை­வர் தேர்­த­லில் அவ­ரைத் தமிழ் மக்­கள் 

ஓரங்­கட்­டி­னார்­கள். போர்க் கால­கட்­டத்­தில் ஒரு புறம் விடு­த­லைப்­பு­லி­க­ளும் மறு­பு­றம் அரச படை­க­ளும் போர்க்­குற்­றங்­களை இழைத்­தார்­கள். இதை நாம் மறுக்க முடி­யாது. பழை­ய­தைக் கிள­றிக் கொண்­டி­ருக்­கா­மல் நடந்த உண்­மை­களை ஏற்­றிக் கொண்டு, 

மறப்­போம் மன்­னிப்­போம். அப்­போ­து­தான் நாட்­டில் நல்­லி­ணக்­கத்தை நிலை­நாட்­ட­லாம். பழை­ ய­தைக் கிள­று­வ­தில் பயன் இல்லை. நாம் அனை­வ­ரும் புதிய வழி­யில் ஓர­ணி­யில் பய­ணிக்க வேண்­டும். இதைத்­தான் வடக்­கில் நான் வலி­யு­றுத்தி இருந்­தேன்.

ஆனால், நான் வடக்­கில் வைத்து நாட்டை பன்­னாட்­டுச் சமூ­கத்­தி­டம் காட்­டிக்­கொ­டுத்து விட்­ டேன் என்று மகிந்த ராஜ­பக்ச தெற்­கில் பொய்ப் பரப்­புரை முன்­னெ­டுக்­கின்­றார். பல கொலை­க­ ளுக்­கும் போர்க்­குற்­றங்­க­ளுக்­கும் உத்­த­ர­விட்ட அவர், இப்­ப­டிப் பொய்­யு­ரைப்­பது வெட்­கக்­கேடு.

மகிந்­த­வின் ஆட்­சிக்­கா­லத்­தில் நாட்­டின் மீது பன்­னாட்டு அழுத்­தங்­கள் என்­று­மில்­லாத வகை­யில் அதி­க­ரித்­தி­ருந்­தன. ஆனால், 2015ஆம் ஆண்டு நாம் ஆட்­சிக்கு வந்த பின்­னர் அந்த அழுத்­தங்­ களை குறைக்­கச் செய்­தோம். கடும் வலு­வு­டைய ஜெனி­வாத் தீர்­மா­னங்­களை 

மென்­மை­யாக்­கி­ னோம். மூவின மக்­க­ளை­யும் அர­வ­ணைத்து ஆட்­சியை நடத்­தி­ னோம். ஆனால், கடந்த வரு­டம் ஒக்­ரோ­பர் மாதம் 26ஆம் திகதி பதவி ஆசை பிடித்த கூட்­ட­ணி­ யால் எமது ஆட்சி 52 நாள்­கள் கவிழ்க்­கப்­பட்­டி­ருந்­தன. 

அந்த நாள்­க­ளில் இந்­தக் கூட்­ட­ணி­யி­னர் நாட்­டின் அதி­யு­யர் சபை­யான நாடா­ளு­மன்­றத்­தையே அசிங்­க­மாக்­கி­னார்­கள். இத­னால் நாட்­டின் மீதான பன்­னாட்டு அழுத்­தங்­கள் மீண்­டும் அதி­க­ ரிக்­கத் தொடங்­கின. 

அதற்­குப் பொறுப்­புக்­கூற வேண்­டி­ய­வர்­கள் யார் என்று நான் சொல்­லத் தேவை­யில்லை. நாம் மீண்­டும் ஆட்­சிக்கு வந்­தா­லும் உள்­நாட்டு அர­சி­ய­லில் எம் மீதான பழி­வாங்­கல் நட­வ­டிக்­கை­கள் தொடர்­கின்­றன. 

ஆனால், பன்­னாட்டு மட்­டத்­தில் இலங்­கை­யின் நற்­பெ­ய­ரைக் காப்­பாற்­றும் நட­வ­டிக்­கை­யில் ஐக்­கிய தேசிய முன்­னணி அரசு ஈடு­பட்­டுள்­ளது. இந்­நி­லை­யில், நாட்­டைக் கொடுக்­கும் நோக்­கம் எனக்­கில்லை – என்­றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு