மடுக் கோயிலையும் கையகப்படுத்த இராணுவம் முயற்சி?

ஆசிரியர் - Editor2
மடுக் கோயிலையும் கையகப்படுத்த இராணுவம் முயற்சி?

மன்னார் - மடுத் திருத்தலத்திற்கான மடுரோட் நுழைவாயில் பகுதியில் இராணுவம் நிலை கொண்டிருப்பதுடன், வியாபாரங்களையும் மேற்கொண்டு வருகிறதாக இந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தொடர்ந்தும் இந்நத பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

இந்த நிலையில் மடுரோட் நுழைவாயிலுக்கு அருகாமையில் இரண்டு அரச மரங்களை வளர்த்து வருகின்றனர்.

அந்த மரங்களுக்கு கீழ் புத்த சிலை அமைக்கும் முயர்ச்சியில் இராணுவம் தீவிரமாக செயல்பட்டு வருவதாக அறிய முடிகிறது.

மேலும், குறித்த விடயம் தொடர்பில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரேதேச வாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.