துபாயில் சிக்கிய மதுஷ் நாடு கடத்தப்படும் சாத்தியம் இல்லை! - உதுல் பிரேமரட்ன

ஆசிரியர் - Admin
துபாயில் சிக்கிய மதுஷ் நாடு கடத்தப்படும் சாத்தியம் இல்லை! - உதுல் பிரேமரட்ன

துபாயில் கைது செய்யப்பட்டுள்ள மாக்கந்துர மதுஷ் மற்றும் ஏனையோரை அங்கிருந்து இலங்கைக்கு நாடு கடத்தும் சாத்தியம் இல்லை என்றும், அவர்கள் மீதான வழக்கு பல நாட்களுக்கு தொடரும் என்றும் துபாய் சென்றுள்ள இலங்கை சட்டத்தரணி உதுல் பிரேமரட்ன கூறினார்.

மாக்கந்துர மதுஷுடன் கைதான பாடகர் அமல் பெரேரா மற்றும் அவரது மகன் நதீமால் பெரேரா ஆகியோர் தற்போது துபாயில் பொலிஸின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பாக ஆஜராகவே சட்டத்தரணி உதுல் பிரேமரட்ன துபாய் சென்றுள்ளார். மேற்படி இருவர் தொடர்பாக உதுல் பிரேமரட்ன ஆஜரானாலும் அவர் நேரடியாக துபாய் நீதிமன்றத்தில் வாதாட முடியாது. அங்குள்ள பொலிஸாரின் விசாரணை அதிகாரியுடன் மட்டுமே அவர் பேச முடியும்.

சந்தேக நபர்களைப் பிணையில் அனுப்புவதா, நாடு கடத்துவதா? இல்லை தொடர்ந்தும் தடுத்து வைப்பதா? என்பதை அந்த அதிகாரியே தீர்மானிக்க வேண்டும். நதீமல் பெரேராவின் இரத்த பரிசோதனையில் அவர் போதைவஸ்து பாவனையில் ஈடுபடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மேற்படி விசாரணை அதிகாரி தன்னிடம் தெரிவித்ததாக சட்டத்தரணி உதுல் பிரேமரட்ன கூறுகிறார்.

எனினும், இந்த அறிக்கையை வைத்து நதீமாலையோ அல்லது வேறு எவரையோ பிணையில் எடுக்க முடியாது. இவர்கள் அனைவருமே ஒரே ஆவணத்தின் கீழ் இந்த வழக்கு பதியப்பட்டிருப்பதே இதற்கு காரணமாகும். அத்துடன் இந்த வழக்கு பல நாட்களுக்கு தொடரும் என்பதுடன் அவர்களை நாடு கடத்தும் சாத்தியம் இல்லையென்றும் சட்டத்தரணி உதுல் பிரேமரட்ன கூறினார்.

அதே நேரம் தனது கட்சிக்காரர்கள் பாட்டு பாடுவதற்காகவே துபாய் வந்தார்களே தவிர, பாதாள உலக கும்பல்களுடன் அவர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவர்களைச் சந்தித்து பேச தனக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லையென்றும் தூரத்தில் நின்றே அவரை தான் பார்க்க முடிந்ததாகவும் சட்டத்தரணி உதுல் பிரேமரட்ன கூறினார்.

அமல் பெரேராவையும் அவரது மகன் நதீமல் பெரேராவையும் பார்க்க ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதி வழங்கப்படும். அப்போது தான், அவர்களை நான் பார்த்துப் பேச முடியும் என்று அவர் மேலும் கூறுகிறார்.

மேற்படி முற்றுகையின்போது மொத்தம் 31 பேர் கைது செய்யப்பட்டதாகவும் , 24 மணி நேரமும் துபாய் கண்காணிப்பு கெமரா மூலம் கண்காணிக்கப்படுவதாகவும் போதைவஸ்து பாவனை மற்றும் கடத்தல் சட்டங்கள் அங்கு மிகக் கடுமையானவை என்றும் அவர் கூறினார்.

போதைவஸ்து பாவனை ஐக்கிய அரபு குடியரசில் தண்டனைக்குரிய குற்றமாகும்.இந்த குற்றத்தின் பேரிலேயே 31 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு குடியரசுக்கு ஊடாகச் செல்லும் பயணிகளிடம் சிறு அளவு போதைவஸ்து இருந்தால் கூட அவர்கள் அங்கு நான்கு வருடங்கள் வரை சிறையில் இருக்க நேரிடும் என்றும் சட்டத்தரணி உதுல் பிரேமரட்ன கூறினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு