போதை பொருள் கடத்தல்காரா்களுக்கு மரண தண்டணை, துாக்கு கயிறு இறக்குமதி செய்யப்படுகிறது..

ஆசிரியர் - Editor I
போதை பொருள் கடத்தல்காரா்களுக்கு மரண தண்டணை, துாக்கு கயிறு இறக்குமதி செய்யப்படுகிறது..

இலங்கையில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டவா்களுக்கு மரண தண்டணை விதிப்பதற்கு துாக்கு கயிற்றை வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தீா்மானித்திருக்கின்றது. 

இதற்காக ஏற்கனவே வெளிவிவகார அமைச்சிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவு ம் அமைச்சு தகவல்கள் தொிவிக்கின்றன. 

தூக்கு மரணத்திற்கான கயிறை கொள்வனவு செய்வதற்காக, தற்போது தூக்கு தண்டனையை நிறைவேற்றும் நாடொன்றை தெரிவு செய்யுமாறு கடிதத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், இந்தியா,

 பங்களாதேஷ் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் நாடுகளின் பட்டியலில் உள்ளன.

தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்காக சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் இருக்கும் தூக்கு கயிறு 12 வருடங்களுக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்டது. பாகிஸ்தான் அதனை அன்பளிப்பாக வழங்கியிருந்தது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு