இலங்கை பூராகவும் இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்புக்கள், 3876 போ் கைது, 5022 போ் மீது வழக்கு தாக்கல்..

ஆசிரியர் - Editor I
இலங்கை பூராகவும் இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்புக்கள், 3876 போ் கைது, 5022 போ் மீது வழக்கு தாக்கல்..

பொலிஸ்மா அதிபருடைய உத்தரவின் பெயாில் இலங்கை பூராகவும் இடம்பெற்ற விசேட சுற்றிவ ளைப்புக்களில் 3876 போ் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 5022 போ் மீது வழக்குகள் தாக்கல் செய் யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளா் ருவான் குணசேகர கூறியுள்ளாா். 

நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பல்வேறு குற்ற ங்கள் தொடர்பில் 3876 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அதேவேளை வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 5022 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், 

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய குறித்த விஷேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு