விழாக்கோலம் பூண்ட வட்டுவாகல், சப்த கன்னிமாா் அறநெறி பாடசாலை அடிக்கல் நாட்டுவிழா..
முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள சப்த கன்னிமார் அறநெறிப் பாடசாலை க்கான அடிக்கல் நாட்டுவிழா மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
அபிவிருத்தி வளர்ச்சியுடன் ஆன் மீகப் பண்புகளை வளர்த்தல் "சிறுவர்களுக்கான அறநெறி ப்பாடசாலை" என்னும் செயற்றி ட்டத்தினூடாக,
வீடைப்பு நிர்மாணத் துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சினால் 33மில்லியன் பெறுமதியில், குறித்த அறநெறநெறிப்பாடசாலை அமைக்கப்டவுள்ளது.
வட்டுவாகல் அறநெறிப்பாடசாலையின் முதல்வர் திரு.அ.செல்வரத்தினம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வானது,
03.02.2019 இன்றையநாள் இடம்பெற்றது.விருந்தினர் வரவேற்புடன் தொடங்கிய இந் நிகழ்வானது, தொடர்ந்து குறித்த அறநெறிப் பாடசாலை அமைப்பதற்குரிய
கல்வெட்டுத் திரை நீக்கம் செய்யப்பட்டது. அதனையடுத்து, மரபுவழியில் வட்டுவாகல் சப்த கன்னிமார் கோவிலில் இறை வழிபாடுகள் இடம்பெற்று,
தொடர்ந்து அறநெறிப் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டதுடன், மங்கல வளக்கேற்றல், விருந்தினர்களது உரைகள்,
கலை நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றன.மேலும் இந் நிகழ்வில் விருந்தினர்களாக வன்னி மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன்,
கோ.தனபாலசுந்தரம் (மேலதிக மாவட்டசெயலர்), சி.சிவஜெயந்தன் (உதவித் திட்டமிடல் பணிப்பாளர்),
விஜித கே.கமகே (முகாமையார், தேசிய வீடமைப்பு அதிகாரசபை), துரைராசா -ரவிகரன் (முன்னள் வடமாகாணசபை உறுப்பினர்),
க.சிவநேசன்(முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர்), தி.இரவீந்திரன் (கரைதுறைப்பற்று பிரதேச உப தலைவர்), ஐக்கியதேசியக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்
ரிஷாம் ஜெமால்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.அத்துடன் இந் நிகழ்வில் அறநெறிப் பாடசாலை நிர்வாகிகள், மாணவர்கள், ஆசிரியர்கள்,
ஊர் மக்கள் என பலரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.