27 மாதங்களாக ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் வவுனியா மாவட்ட செயலக அதிகாரிகள், மக்கள் விசனம்..
வவுனியா மாவட்டத்தில் போர் காலத்தில் அமைக்கப்பட்ட சுமார் 22 கிலோ மீற்றர் நீளமான மண் தடுப்பணையை அகற்றுமாறு மாவட்ட செயலகம் அறிவித்து 27 மாதங்கள் கடந்துவிட்டபோதும், ஒரு நடவடிக்கையும் எடு க்கப்படவில்லை.
படையினரால் அமைக்கப்பட்ட குறித்த மண் தடுப்பணைகளால் பெருமளவு விவசாய நிலங்கள் இன்று வரை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். அவற்றை அகற்றுமாறு 2016 ஆம் ஆண்டு மாவட்டச் செயலரிடம் பிரதேச விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகளின் கோரிக்கைஇ பாதுகாப்பு அமைச்சின் செயலருக்கு அறிவிக்கப்பட்டது. இதன் பிரகாரம் வவுனியாவில் உள்ள 22 கிலோ மீற்றர் தடுப்பணைகளை அகற்றி மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ப செப்பனிடுவதற்கான
செலவு மதிப்பீடு ஒன்றை தயாரித்து வழங்குமாறு கோரப்பட்டது. தடுப்பணைகளை அகற்ற 15 மில்லியன் ரூபா தேவையென 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாவட்டச் செயலகத்தினால் மதிப்பிடப்பட்டு அதன் செலவு மதிப்பீடுகள் அனுப்பி வைக்கப்பட்டன.
செலவு விபரத்தைத் தயாரித்து பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி உள்ளோம் எனக்கூறி மாவட்டச் செயலக அதிகாரிகள் காலம் கடத்துகின்றனர். இது தொடர்பிலும் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி விவசாயிகளுக்கு உதவ வேண்டும்
என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.