பிரதேசசபை உறுப்பினரை வழிமறித்து சோதனை செய்யத இராணுவம் மற்றும் பொலிஸாா், எழுந்துள்ள சிறப்புாிமை பிரச்சினை..

ஆசிரியர் - Editor I
பிரதேசசபை உறுப்பினரை வழிமறித்து சோதனை செய்யத இராணுவம் மற்றும் பொலிஸாா், எழுந்துள்ள சிறப்புாிமை பிரச்சினை..

வவுனியா- தெற்கு பிரதேசசபை உறுப்பினா் அஞ்சலா கோகிலகுமாா் என்பவரை பொலிஸாா் மற்றும் இரா ணுவத்தினா் வழிமறித்து சோதனை செய்துள்ளனா். இதனால் தனது சிறப்புாிமை மீறப்பட்டுள்ளதாவ அவா் சிறப்புாிமை பிரச்சினையை எழுப்பியுள்ளாா். 

”நான் ஒரு பிரதேச சபை உறுப்பினர் என்ற விடயத்தைத் தெரிவித்தும் தன்னை விடுவிக்காது என்னைச் சோதனைக்கு உட்படுத்தினர். இதனால் எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது ”என்று உறுப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாலமோட்டை கிராம சேவையாளர் பகுதியிலுள்ள நவ்வி பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் பங்குபற்றி விட்டு வீடு திரும்பிய பிரதேச சபை உறுப்பினர் திருமதி அஞ்சலா கோகிலகுமாரை, அப்பகுதியில் காவலிலிருந்த இராணுவத்தினர் 

மற்றும் பொலிஸார் வழிமறித்து அடையாள அட்டை உட்பட அனைத்து ஆவணங்களையும் பரிசோதனைக்குட்படுத்தியுள்ளனர். “தற்போதைய சாகமான சூழ்நிலையில் இராணுவத்தின் மற்றும் பொலிஸாரின் சோதனை நடவடிக்கை பெரிதும் மக்களைப் பாதித்துள்ளது. 

இது எனது சிறப்புரிமை மீறல் மட்டுமல்ல. வீதியில் நடமாட மக்கள் அச்சப்பட வேண்டியுள்ளது ” என்று பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்தார். கடந்த சில தினங்களாக ஓமந்தை, குஞ்சுக்குளம் பகுதிகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு