ரணில்- சம்மந்தன் இணைந்து தமிழீழத்தை உருவாக்கபோகிறார்களாம்..! நகைப்புக்கிடமாக கருத்து கூறும் மஹிந்த அணி..

ஆசிரியர் - Editor I
ரணில்- சம்மந்தன் இணைந்து தமிழீழத்தை உருவாக்கபோகிறார்களாம்..! நகைப்புக்கிடமாக கருத்து கூறும் மஹிந்த அணி..

சம்மந்தன், ரணில் மற்றும் கரு ஜயசூரிய ஆகியோர் இணைந்து தமிழீழத்தை உருவாக்க முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பவித்திரா வன்னியாராச்சி நகைப்புக்கிடமான கருத்து ஒன்றை கூறியள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பவித்திரா வன்னியாராச்சி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்இ 'தமிழீழத்தை உருவாக்கும் முயற்சியில் பிரதமர் ரணில் கரு ஜயசூரிய மற்றும் இரா.சம்பந்தன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த காலத்தில்இ பிரதமர் சபாநாயகர் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஒன்றிணைந்து நாட்டில் மீண்டும் ஈழத்தைக் உருவாக்கும் நோக்கிலேயே செயற்பட்டனர்.

இதற்காகவே சமஷ்டி அரசியலமைப்பை கொண்டு வர இந்த மூவரும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் இதனை நிறைவேற்ற தமது தரப்பு ஒருபோதும் இடமளிக்காது.

கடந்த காலத்தில் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட தமக்கு உரிமை மறுக்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜே.வியின் கைகளிலேயே நாடாளுமன்றம் காணப்பட்டது.

குறிப்பாக ரணில் விக்ரமசிங்க கருஜயசூரிய சம்பந்தன் ஆகிய இந்த மூவரின் கையில் சிக்குண்டிருந்தது. எனினும் தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது.

தற்போது மகிந்த ராஜபக்ச எதிர்கட்சித் தலைவர் ஆகியதை தொடர்ந்து நாடாளுமன்றம் விடுதலை பெற்றுள்ளது. இனி மக்களின் உரிமையை வென்றெடுக்கும் தமது போராட்டம் தொடரும்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு