28 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை எரிபொருள் நிரப்பு நிலையம் மீள செயற்பாட்டுக்கு வருகிறது..

ஆசிரியர் - Editor I
28 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை எரிபொருள் நிரப்பு நிலையம் மீள செயற்பாட்டுக்கு வருகிறது..

இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையம் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் மீள புனரமைக்கப்பட்டு எதிர்வரும் எதிர்வரும் 24 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வைபவ ரீதியக திறந்து வைக்கப்படவுள்ளது.

பிரதம விருந்தினரக வலி.வடக்கு.தெல்லிப்பழை பிரதேச செயலர் ச.சிவஸ்ரீ, சிறப்பு விருந்தினராக இலங்கைபெற்றோலியக் கூட்டுத்தாபன வடபிராந்திய முகாமையாளர் சி.சிவதரன் , வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் பொ.வாகீசன், கௌரவ விருந்தினர்களாக வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் , 

காங்கேசன்துறை பொலிஸ் நிலைய தலைமை நிலைய பொறுப்பதிகாரி K.O.P.அபெயரட்ன ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் டீசல் மட்டுமே விநியேகிக்கப்பட்ட நிலையில் தெல்லிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட காங்கேசன்துறை மயிலிட்டி 

தையிட்டி ஊறணி பகுதியில் மீள்குடியேறிய மக்கள் , கடற்றொழிலுக்கு செல்லும் மக்கள், வாகனச் சாரதிகள் எரிபொருள் நிரப்பு நிலையம் இன்மையால் அப்பகுதியில் வாகனங்களை வைத்திருப்பவர்கள் மற்றும் மீன்பிடித் தொழில் செய்பவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்ததுடன் பெற்றோலினை பெறுவதாயின் மல்லாகம் செல்லவேண்டிய நிலையிருதது 

இவ்வாறான நிலையில் தற்போது இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் மீளபுனரமைக்கப்பட்டதையடுத்து டீசல், பெற்றோல், மண்ணென்னை என்பவற்றை விநியோகம் செய்யப்படவுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு