மதுபானசாலை அமைக்க ஆட்சேபனை இல்லை, கடிதம் வழங்கிய அதிபர் சர்ச்சையில் சிக்கினார்..

ஆசிரியர் - Editor I
மதுபானசாலை அமைக்க ஆட்சேபனை இல்லை, கடிதம் வழங்கிய அதிபர் சர்ச்சையில் சிக்கினார்..



"வவுனியா ஓமந்தை அம்மாச்சி உணவகத்திற்கு அருகிலுள்ள முன்னர் வெதுப்பகம் அமைந்திருந்த பகுதியில் மதுபான விற்பனை நிலையம் அமைப்பதில் ஓமந்தை மத்திய கல்லூரிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை"

இவ்வாறு ஓமந்தை மத்திய கல்லூரியின் பாடசாலை அதிபர் கெ.தனபாலசிங்கம் மதுவரி ஆணையாளர் கொழும்பிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வேலாயுதம் சுரேந்திரனால் எமக்கு வழங்கப்பட்டுள்ள கடிதத்தின் படி அவரால் கண்டி வீதி, ஓமந்தைப்பகுதியில் அமைக்கப்படும் பியர் விற்பனை நிலையம் பாடசாலையிலிருந்து 

500மீற்றர் தூரத்திற்கு அப்பால் இருப்பதால் பாடசாலைக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனத் தெரிவிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை இப்பகுதியில் குறித்த மதுபான விற்பனை நிலையம் அமைப்பதற்கு பல்வேறு பொது அமைப்புக்கள் தமது எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றன.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவரும் தமது சபையினரின் அனுமதியின்றி அமைக்கப்படும் குறித்த மதுபான விற்பனை நிலையத்திற்கு அனுமதி வழங்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே மேற்படி அதிபர் மது விற்பனை நிலையத்தால் இடையூறு இல்லை என கடிதம் வழங்கியுள்ளார்.



காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு