நல்லிணக்க விழிப்புணர்வூட்டல் செயற்றிட்டத்திற்காக கொழும்பிலிருந்து வந்த விசேட குழு..

ஆசிரியர் - Editor I
நல்லிணக்க விழிப்புணர்வூட்டல் செயற்றிட்டத்திற்காக கொழும்பிலிருந்து வந்த விசேட குழு..

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் அமைப்புக்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட சமாதானம் நிலையான சமாதானம் நிலையான அபிவிருத்தி சகல இனங்களுடைய நல்லிணக்கம் தொடர்பில் கொழும்பில் மட்டும் பேசிக்கொண்டிருக்காது 

ஒவ்வொரு இடமாகச் சென்று அந்த மக்களிடையே கலந்துரையாடி எங்களுடைய நாட்டுக்கு நல்லிணக்கத்தை கொண்டுவருவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளில் செயற்பாடாக   அகிம்சை  ஊடாக நிலையான  அபிவிருத்தி இலக்குகளை நோக்கி... 

என்ற நல்லிணக்க விழிப்பூட்டல் எண்ணக்கருவுடன் அதன் குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு விசேட ரயிலில் நேற்றிரவு 11 கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தனர். 

இது குறித்து இதன் ஏற்பாட்டாளர் செல்வேந்திரன் கருத்து தெரிவிக்கையில் 

இக் குழுவின் தலைவியான நிசாகா தர்மதாசாவுடன் இணைந்து 2000 ஆண்டிலிருந்து இந்த பயணத்தில் ஈடுபட்டு வருகின்றோம். 

யுத்தம் முடிந்த போதும் இன்னும் மக்களிடையே நல்லிணக்கம் சமாதானமும் தோன்றவில்லை  

 ஆகவே மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசியல் ரீதியாக அல்லாது அரசியலுக்கு அப்பால் எமது மக்களை ஒன்றிணைப்பதற்காக புரிந்துணர்வை ஏற்படுத்துதற்காக இவ்வாறான நிகழ்ச்சித்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இன்று காலை 10 மணி தொடக்கம் 12 மணிவரை  யாழ்.மாநாகர முதல்வர் ஆனோல்ட் உடன்  இணைந்து யாழ்.நகரில்  ஒரு சமாதானத்தை நிலைநாட்ட அங்கு மக்களை ஒன்றிணைத்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் 

நிகழ்வினை நடத்தியதுடன்  பயிற்சிப் பட்டறையும் விழிப்புணர்வு கூட்டமும் இடம்பெற்றது.  மீண்டும் அநுராதபுரத்திற்கு சென்று அங்கு  சமானதானம்  நல்லிணக்கம் குறித்தான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒழுங்கு செய்துள்ளோம் என்றார்

மேலும் நேற்று கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் புறப்பட ஆரம்பிக்கையில் கொழும்பு ரயில் நிலையத்தில் எமது குழுவினரால் வீதி நாடகம் ஒன்றை நடத்தியிருந்தாகவும் அவர் தெரிவித்தார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு