முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் கடத்தப்பட்ட தேக்கு மர குற்றிகள் சிக்கின..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் கடத்தப்பட்ட தேக்கு மர குற்றிகள் சிக்கின..

முல்லைத்தீவிலிருந்து கனரவ வாகனத்தில் மணலுக்குள் மறைத்து கடத்தப்பட்ட 25 தேக்கு மர குற்றிகளை பொலி ஸார் கைப்பற்றியுள்ளனர். 

இன்று நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

முல்லைத்தீவில் இருந்து டிப்பரில் மறைத்து கொண்டுசெல்ல முற்பட்ட தேக்குமரக்குற்றிகள் பொலிசாரினால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் இருந்து மணல் ஏற்றும் டிப்பரில் மறைத்து ஏற்றப்பட்ட 25 தேக்கு மரக்குற்றிகளுக்கு மேல் மணலினை ஏற்றி மறைத்துக்கொண்டு யாழ்ப்பாணம் செல்ல முற்பட்ட டிப்பர் வாகனமொன்றினை 

விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் பிடிக்கப்பட்டுள்ளது.  முல்லைத்தீவு மாவட்ட உப பொலிஸ் பரிசோதகர் திசநாயக்க தலைமையிலான குழுவினர் முறிப்பு பகுதியில் குறித்த டிப்பரினை மறித்து சோதனை செய்தபோது 

டிப்பரில் மணல் போடப்பட்டு மறைத்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்படவிருந்த 25 தேக்கு மர குற்றிகளை ஏற்றிய டிப்பர் வண்டியினை கைப்பற்றி குறித்த வண்டியின் சாரதியையும்  கைதுசெய்துள்ளனர்.

குறித்த டிப்பர் வண்டி முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் கைதுசெய்யப்பட்ட சாரதியினை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக 

முல்லைத்தீவு பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு