நீண்டகாலம் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளுக்கு விரைவில் நல்ல செய்தி..

ஆசிரியர் - Editor
நீண்டகாலம் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளுக்கு விரைவில் நல்ல செய்தி..

மிக நீண்டகாலம் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளுக்கு மிக விரைவில் நல்ல செய்தி வரும் என நீதி அமைச்சர் தலதா அத்துக்கொரல கூறியுள்ளார். 

11 மாதங்கள் சிறையிலிருந்த அர்ஜூன்அலோசியஸுக்கு பிணை வழங்க முடியும் என்றால்இ 11 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலையில் வாடும் அரசியல் கைதிகளுக்கு ஏன் பிணை வழங்க முடியாது?

என நாடாளுமன்றில் உரையாற்றும் போது சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி கேள்வியெழுப்பியிருந்தார். இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்னவென 

நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசு நல்ல தீர்மானம் எடுக்கவுள்ளது. இது தொடர்பில் அரசு ஆராய்ந்து வருகின்றது. இந்த தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் விரைவில் அறிவிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

Radio
×