மண்டைதீவு மனித புதைகுழி தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படும்..

ஆசிரியர் - Editor I
மண்டைதீவு மனித புதைகுழி தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படும்..

மண்டைதீவில் பாரிய மனித புதைகுழிகள் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக உரிய கவனம் செலுத்தப்படும் என காணாமல்போனவர்கள் அலுவலகத்தின் தவிசாளர் சாலிய பீரிஸ் கூறியுள்ளார். 

நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது மன்னார் மாவட்டத்தில் மட்டுமல்ல யாழ்ப்பாணம்- மண்டைதீவிலும் பாரிய மனித புதைகுழிகள் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கூறியிருந்ததுடன்,

குறித்த பகுதியில் இரு கிணறுகளில் சுமார் 120 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டு சடலங்கள் போடப்பட்டுள்ளதாகவும் அந்த கிணறுகள் கொக்கிறீட் போட்டு மூடப்பட்டுள்ளதாகவும் அதனை உடனடியாக தோண்டி ஆய்வு செய்யவேண்டும் எனவும் கூறியிருந்தார். 

இந்த கருத்து தொடர்பாக கருத்து கூறும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் குறித்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தப்படும் எனவும், மற்றய ஆணையாளர்களுடன் பேசி தீர்மானிப்பதாகவும் சாலிய பீரிஸ் மேலும் கூறியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு