ஆயுதங்கள் அடங்கிய பொதி மீட்பு சம்பவத்தில் கைதான பெண்ணிடமிருந்து இயந்திர துப்பாக்கி மீட்பாம், 12 பேருக்கு வலைவீசும் பொலிஸாா்.

ஆசிரியர் - Editor I
ஆயுதங்கள் அடங்கிய பொதி மீட்பு சம்பவத்தில் கைதான பெண்ணிடமிருந்து இயந்திர துப்பாக்கி மீட்பாம், 12 பேருக்கு வலைவீசும் பொலிஸாா்.

புளியங்குளம்- புதுாா் பகுதியில் துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பெயாில் கைது செய்யப்பட்டுள்ள பெ ண்ணிடம் இருந்து ாி-56 துப்பாக்கி ஒன்றும், 3 மோட்டாா் ஷெல்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாா் கூறியுள்ளனா். 

வவுனியா, புளியங்குளம் பகுதியில் உள்ள புதூரில், கைத்துப்பாக்கி, கைக்குண்டுகளைக் கொண்ட பொதியை வீசி விட்டுத் தப்பிச் சென்ற நபர் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளின் மூலம், பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து கிடைத்த தகவல்களை அடுத்து, ரி 56 ரகத் துப்பாக்கி ஒன்றும், மூன்று மோட்டார் குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

புதூரில் பொலிஸாரைக் கண்டதும், நபர் ஒருவர் தனது கையில் இருந்த பொதியை வீசி விட்டுத் தப்பிச் சென்றிருந்தார். இதையடுத்து,பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து தேடுதலில் ஈடுபட்டனர். 

எனினும், எவரும் கைது செய்யப்படவில்லை. பொதியில் இருந்து மீட்கப்பட்ட அலைபேசிகள் உள்ளிட்ட தடயப்பொருட்களை வைத்து நடத்திய தொடர் விசாரணைகளை அடுத்து, 

பெண் ஒருவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். பெண் கைது செய்யப்பட்டதை அடுத்து, ரி 56 ரகத் துப்பாக்கி ஒன்றும், மூன்று மோட்டார் குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீசி விட்டுச் சென்ற பை ஒன்றையை தான் எடுத்து வைத்திருந்ததாகவும், அதற்குள் என்ன இருந்தன என்பது தனக்குத் தெரியாது என்றும் அந்தப் பெண் விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.

ஆயுதப் பொதி வீசப்பட்ட சம்பவத்துடன் 12 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆயுதப் பொதியை வீசி விட்டுச் சென்றவர், இவர்களைக் கையாளுபவர் உள்ளிட்ட 9 பேர் இன்னமும் தேடப்பட்டு வருகின்றனர்.

இவர்களைக் கையாளுபவரான பிரதான சந்தேக நபர், இந்தியாவுக்கு தப்பியோடி விட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அடையாளம் தெரியாத இடத்தில் இருந்து புளியங்குளத்துக்கு 

ஆயுதப் பொதியை எடுத்து வந்தவரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு