புதுாா் பகுதியில் துப்பாக்கி உள்ளிட்ட வெடி பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம், சந்தேகநபா் இந்தியாவுக்கு தப்பியோட்டம்..

ஆசிரியர் - Editor I
புதுாா் பகுதியில் துப்பாக்கி உள்ளிட்ட வெடி பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம், சந்தேகநபா் இந்தியாவுக்கு தப்பியோட்டம்..

புளியங்குளம்- புதுாா் பகுதியில் துப்பாக்கியை வீசிவிட்டு காட்டுக்குள் ஓடி மறைந்தவா் இந்தியாவுக்கு தப்பி சென்றுள்ள தாக பொலிஸாா் கூறியுள்ளதுடன், இதுவரையில் 3 போ் சந்தேகத்தின் பெயாில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாா் கூறியிருக்கின்றாா்கள். 

சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளின் மூலம், பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்ப ட்டுள்ளன ர். இந்தச் சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து கிடைத்த தகவல்களை அடுத்து, ரி 56 ரகத் துப்பாக்கி ஒன்றும், மூன்று மோட்டார் குண்டுகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

புதூரில் பொலிஸாரைக் கண்டதும், நபர் ஒருவர் தனது கையில் இருந்த பொதியை வீசிவிட்டுத் தப்பிச் சென்றிருந்தார். 
இதையடுத்து, பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து சுற்றிவளைப்புத் தேடுதலில் ஈடுபட்டனர். எனினும், எவரும் கைது செய்யப்படவில்லை. 

பொதியில் இருந்து மீட்கப்பட்ட கைபேசிகள் உள்ளிட்ட தடயப்பொருள்களை வைத்து நடத்திய தொடர் விசாரணைகளை அடுத்து, பெண் ஒருவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் கைது செய்யப்பட்டதை அடுத்து, ரி 56 ரகத் துப்பாக்கி ஒன்றும், மூன்று மோட்டார் குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

எனினும், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீசி விட்டுச் சென்ற பை ஒன்றை தான் எடுத்து வைத்திருந்ததாகவும், அதற்குள் என்ன இருந்தன என்பது தனக்குத் தெரியாது என்றும் அந்தப் பெண் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே, ஆயுதப் பொதி வீசப்பட்ட சம்பவத்துடன் 12 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  ஆயுதப் பொதியை வீசி விட்டுச் சென்றவர், இவர்களைக் கையாளுபவர் உள்ளிட்ட 9 பேர் இன்னமும் தேடப்பட்டு வருகின்றனர். 

இவர்களைக் கையாளுபவரான பிரதான சந்தேக நபர், இந்தியாவுக்கு தப்பியோடி விட்டார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.  அடையாளம் தெரியாத இடத்தில் இருந்து புளியங்குளத்துக்கு ஆயுதப் பொதியை எடுத்து வந்தவரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு