விவசாய அமைச்சாின் கருத்து கண்டிக்கத்தக்கது.. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் சாள்ஸ் காட்டம்.

ஆசிரியர் - Editor I
விவசாய அமைச்சாின் கருத்து கண்டிக்கத்தக்கது.. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் சாள்ஸ் காட்டம்.

கிளிநொச்சிக்கு விவசாய அமைச்சர் வரும்போது கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் சமூகம் தரவி ல்லை என அமைச்சர் கரிசன் கூறிய கூற்று கண்டிக்கத்தக்கது என கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் விபரம் தெரிவிக்கையில். 

கிளிநொச்சி , முல்லைத்தீவு மாவட்டங்களில் டிசம்பர் 23ம் திகதி இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் முதல் சகல அமைச்சர்களையும் நேரில் அழைத்து வந்து இழப்புகளை காண்பித்து அதற்காக இழப்பீடுகளிற்கு வழியேற்படுத்த

துரித துயற்சியில் ஈடுபட்டது. அதனை தொடர்ந்தும் செயல்படுகின்றது. இந்த வகையில். விவசாய அமைச்சர் கரிசனும் கடந்ந வாரம் கிளிநொச்சி வருகை தந்தது அந்த மாவட்டங்களில் விவசாயிகளிற்கு ஏற்பட்ட அழிவுக ளிற்க்கான இழப்பீடுகளிற்கு வழி ஏற்படும் என நம்புகின்றோம்.

இருப்பினும் குறித்த அமைச்சரின் பயணம் தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு முதல் நாள் மாலையிலேயே தகவல் வழங்கப்பட்டது. அதன் காரணமாகவே கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்க ளால் குறித்த இடத்திற்கு சமூகமளிக்க முடியவில்லை. 

மாறாக எமது மக்களின் விடயத்தில் நாம் அக்கறையற்று உள்ளதுபோன்று அமைச்சர் தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்திருப்பது வேதனைக்குரியது. இதன் காரணமாகவே அமைச்சர்கள் தெற்கு பிரமுகர்கள் குறித்த பிரதேசங்களிற்கு பயணிக்கும் சமயம் முற்கூட்டிய தகவல் 

வழங்குமாறு நாம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தோம். எனப் பதிலளித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு