புதுாா் துப்பாக்கி மீட்பு சம்பவம் கைதான பெண் சமையல் செய்த பாடசாலை நிா்வாகத்தை அச்சுறுத்தும் படையினா்..

ஆசிரியர் - Editor I
புதுாா் துப்பாக்கி மீட்பு சம்பவம் கைதான பெண் சமையல் செய்த பாடசாலை நிா்வாகத்தை அச்சுறுத்தும் படையினா்..

புளியங்குளம்- புதுாா் பகுதியில் துப்பாக்கி உள்ளிட்ட வெடி பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடா்பில் கைதான பெண் சமையல் செய்த பாடசாலை நிா்வாகத்தை படையினா் தொடா்ந்தும் அச்சுறுத்திக் கொண்டிருப்பதாக பொலிஸ் நிலையத் தில் பாடசாலை அதிபா் முறைப்பாடு பதிவு செய்துள்ளாா். 

வவுனியா புதுர்ப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய ஒருவரைப் பொலிஸார் தேடிச் சென்ற சமயம் பொலிசா ரைக் கண்டவுடன் கையில் இருந்து பை ஒன்றினை தூக்கி எறிந்து விட்டுத் தப்பியோடினார் அவர். அந்தப் பையில் இருந்து ஓர் கைத்துப்பாக்கி , 4 எறிகுண்டு , 2 கைத் தொலைபேசி என்பன 

கடந்த 1 ஆம் திகதி மீட்கப்பட்டன என்று கனகராயன்குளம் பொலிஸார் அறிவித்திருந்தனர். இதனையடுத்து மறுநாள் 2 ஆம் திகதி புதுர்ப் பகுதியில் தேடுதல் வேட்டையும் இடம்பெற்றது. கடந்த வெள்ளிக் கிழமை கனகராயன்குளம் , ஆலங்குளம் , புதுக்குளம் பகுதிகளில் படையினரும் பொலிஸாரும் 

இனைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்புத் தேடுதல்களின் போது மூவர் கைது செய்யப்பட்டனர். புதுக்குளம் பகுதியில் பண்டிதமனி கணபதிப்பிள்ளை வித்தியாசாலையில் சமையல் பணியில் ஈடுபட்ட 35 வயதினையுடைய சிறீக்காந் – தர்சினி என்னும் ஒரு பிள்ளையின் தாயாரும், அவரது 10 வயது ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர் .

புதூர்ப் பகுதியில் ஆயுதங்களுடன் நடமாடியவருக்கு உணவு வழங்கினார் எனத் தெரிவிக்கப்படும் குறித்த பாடசாலை சமையலாளரைப் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்தனர். அவரது உடமையில் இருந்த பாடசாலை அறையின் திறப்பை பாடசாலை நேரம் எடுத்து வந்து 

அந்த அறையைத் திறக்க கோரியுள்ளனர். இருப்பினும் பாடசாலை அதிபர் கடமை நிமித்தம் வெளியில் சென்றிருந்தமையினால் அந்த அறையை சோதனையிட்டுள்ளனர். இதன் பின்னர் பாடசாலக்குச் சமூகமளித்த அதிபர் பாடசாலை சம்பவத் திரட்டுப் புத்தகத்தில் பதிந்து வலயக் கல்வி அலுவலகத்துக்கும் முறையிட்டுள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் தொடர்ந்துப் புலனாய்வுப் பிரிவினர் பாடசாலை அதிபருக்கு நெருக்குதல் அளிப்பதாக அப்பகுதி கிராம சேவகரிடமும் முறையிடப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு