ஊடகத்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கள் ஜனாதிபதிக்கு இல்லை. ஐ.தே.கட்சி உறுதி.

ஆசிரியர் - Editor I
ஊடகத்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கள் ஜனாதிபதிக்கு இல்லை. ஐ.தே.கட்சி உறுதி.

சட்டம் ஒழுங்கு மற்றும் ஊடகத்துறை ஆகிய அமைச்சுக்களை எந்த காரணத்திற்காகவும் ஜனாதிபதிக்கு விட்டு க் கொடுக்கபோவதில்லை. என ஐக்கியதேசிய கட்சி அறிவித்துள்ளது. 

கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் இந்த விடயத்தை அண்மையில் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த அமைச்சுக்களை ஜனாதிபதியிடம் வழங்கினால் மீண்டும் அரசியமைப்பு மற்றும் அரசியல் பிரச்சினைகள் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியை பொறுத்தவரை அவர், பாதுகாப்பு மற்றும் மஹாவலி அபிவிருத்தி, சுற்றாடல்துறை அமைச்சை பொறுப்பேற்க முடியும்.

இதனை தவிர அவருக்கு வேறு அமைச்சுக்களை வழங்கினால் அது பிரச்சினையை ஏற்படுத்தும் என்றும் அகில விராஜ் குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு