சக நாடாளுமன்ற உறுப்பினருக்கு முத்தம் கொடுத்து பாராட்டிய ஹிருணிகா..

ஆசிரியர் - Editor I
சக நாடாளுமன்ற உறுப்பினருக்கு முத்தம் கொடுத்து பாராட்டிய ஹிருணிகா..

ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா் மலிக் சமரவிக்கிரமவுக்கு சக நாடாளுமன்ற உறுப்பினா் ஹிருணிகா முத்தம் கொடுத்து பாராட்டு தொிவித்துள்ளாா். 

ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இதன் போது கட்சியின் நலனுக்காக அர்ப்பணிப்பு செய்வதாகவும், 

அமைச்சுப் பதவி எதனையும் ஏற்கப் போவதில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

இதன்போது ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கை தட்டி தங்களது பாராட்டுக்களை மலிக் சமரவிக்ரமவிற்கு தெரிவித்துள்ளனர்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர, மலிக் சமரவிக்ரமவிடம் சென்று அவருக்கு முத்தமொன்றைக் கொடுத்து தனது பாராட்டினை வெளிப்படுத்தியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு