உங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..

ஆசிரியர் - Editor I
உங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..

இலங்கை அரசியலில் கடந்த 50 நாட்களாக நீடித்திருந்த குழப்ப நிலமை இன்றுடன் நிறைவுக்கு வருகின்றது என கூறப்பட்டாலும் பிரச்சினை இன்னும் தீரவில்லை. இனித்தான் பிரச்சினையே இருக்கிறது என கொழும்பு தகவல்கள் தொிவிக்கின்றன. 

மகிந்த ராஜபக்ச நேற்றைய தினம் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ரணில் விக்ரசிங்க மீண்டும் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு பேசிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்ளியவர்கள் தான் நீங்கள். இன்று நாடு ஸ்தம்பிதம் அடைய கூடாதென்றே நான் இந்த முடிவுக்கு வந்தேன்.

கடாபி போன்ற நிலைமை எனக்கு வரும் என்று சொன்னீர்கள். முடிந்தால் அப்படி செய்யுங்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு காட்டமாகப் பேசியுள்ளார் என்று அவரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் நாட்டில் ஏற்பட்டிருக்கும் சிக்கல்களுக்கு விரைவாக தீர்வினைக் காண்போம் என்றும், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோன்று ஜனாதிபதியுடன் இணைந்து நாங்கள் பயணிப்போம் என்று ஐக்கிய தேசியக் கட்சியினர் தகவல்கள் வெளியிட்டிருந்தனர். ஆனால், ஜனாதிபதியின் இந்தக் காட்டமான பதில் அடுத்தடுத்த நாட்களில் கொழும்பு அரசியலில் மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும் என்று எதிர்வு கூறப்படுகின்றது.

இதுவொருபுறமிருக்க, அலரிமாளிகையில் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களை சந்தித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க அனைவரும் விரைவில் தேர்தல் ஒன்றுக்கு தயாராக வேண்டுமென தெரிவித்துள்ளார்.

எனவே அடுத்த சில மாதங்களில் பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் என்பன நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகளவில் உண்டு என்கின்றன அரசியல் தகவல்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு