ஐக்கியதேசிய முன்னணியின் புதிய அரசாங்கத்தில் இவா்கள்தான் அமைச்சா்கள், ஜனாதிபதிக்கு பெயா் பட்டியல் சமா்பிப்பு..

ஆசிரியர் - Editor I
ஐக்கியதேசிய முன்னணியின் புதிய அரசாங்கத்தில் இவா்கள்தான் அமைச்சா்கள், ஜனாதிபதிக்கு பெயா் பட்டியல் சமா்பிப்பு..

ஐக்கியதேசிய முன்னணியின் தலமையில் புதிய அரசாங்கம் அமையவுள்ள நிலையில் புதிய அரசாங்கத்தில் அங்கத்துவம் பெறும் அமைச்சா்களின் பெயா் அடங்கிய பட்டியல் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

நீதிமன்றத் தீர்ப்பினையடுத்து மகிந்த ராஜபக்ச தன்னுடைய பதவியை இராஜினாமா செய்து கொண்டதையடுத்து, நாளை மீண்டும் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்கிறார்.

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நாளை காலை 10 மணிக்கு, ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்பார் என்று ஐக்கிய தேசிய கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், புதிய அமைச்சர்களின் பதவியேற்பு நாளை மறுநாள் திங்கட்கிழமை இடம்பெறலாம் என்றும் அக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவையில் இடம்பெறவுள்ள அமைச்சர்களின் பட்டியலைத் தயாரிக்கும் பணி நேற்றிரவு அலரி மாளிகையில் இடம்பெற்றதாக அக்கட்சியை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் பணியில் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐதேக தலைவர்களும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களும் இதுதொடர்பான ஆலோசனைகளில் ஈடுபட்டனர்.

இந்த கலந்தாய்வின் முடிவில் அமைச்சர்களின் பட்டியலை ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியிடம் கையளிப்பார். 19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைய, 

30 அமைச்சர்கள் மற்றும், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 45 பேரை மட்டுமே நியமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை புதிய அமைச்சரவையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 6 பேரும் இடம்பெறும் வாய்ப்புகள் இருப்பதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு