ரணில் விக்கிரமசிங்கவை ஆதாிப்பதற்கு கூட்டமைப்பு எந்த நிபந்தனையினையும் விதிக்கவில்லை.. ஒப்புக் கொண்டாா் நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிவமோகன்..

ஆசிரியர் - Editor I
ரணில் விக்கிரமசிங்கவை ஆதாிப்பதற்கு கூட்டமைப்பு எந்த நிபந்தனையினையும் விதிக்கவில்லை.. ஒப்புக் கொண்டாா் நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிவமோகன்..

ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவளிப்பதற்காக தமிழ்தேசிய கூட்டமை ப்பு எந்தவொரு நிபந்தனையினையும் விதிக்கவில்லை. என கூறியிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிவமோகன், 

மஹிந்த ராஜபக்ஸ வந்துவிடக்கூடாது என்பதற்காகவே தமிழ்தேசிய கூட்டமைப்பு ரணில் மீதான நம்பிக் கை வாக்கெடுப்புக்கு ஆதரவாக வாக்களித்து அவரை வெற்றிபெற செய்துள்ளதாகவும் ஊடகங்களுக்கு கருத்து கூறியிருக்கின்றாா். 

இன்றைய பாராளுமன்ற வாக்கெடுப்பு சம்பந்தமாக ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிவமோகன் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலு ம் அவா் கூறுகையில், 

மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு, இராணுவ கட்டுப்பாடு போன்ற பல பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும், அந்தப் பிரச்சினைகள் கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் இருக்கவில்லை என்றும் அவர் கூறினார். 

ஆகவே தமக்கு வேண்டாத ஒருவர் அதிகாரத்திற்கு வராமல் இருப்பதற்காகவே ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் வாக் களித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு