மேலும் தீவிரமடையும் கொழும்பு அரசியல் குழப்பம்.. மைத்திாிக்கு தொடா் சவால் விடுக்கும் ஐ.தே.கட்சி.

ஆசிரியர் - Editor I
மேலும் தீவிரமடையும் கொழும்பு அரசியல் குழப்பம்.. மைத்திாிக்கு தொடா் சவால் விடுக்கும் ஐ.தே.கட்சி.

மஹிந்த ராஜபக்ஸவுக்கும் அவா் தலமையில் கூட்டப்பட்ட புதிய அமைச்சரவைக்கும் நீதிமன்றம் பிறப்பித்த தடையுத்தரவு அடுத்த வருடம் வரையில் நீடிக்கப்பட்டிருக்கும் நிலையில் இலங்கையின் அரசியல் பதற்ற நிலமை மேலும் தீவிரமடையலாம் என நாடாளுமன்ற உறுப்பி னா் உதய கம்பின்பில கூறியுள்ளாா். 

மகிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவைக்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் விதித்திருந்த தடையுத்தரவுக் காலம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் உயர்நீதிமன்றம் காலம்தாழ்த்தாமல் ஒரு தீர்ப்பினை வழங்கியிருந்தால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டதை போன்று ஏழு நாட்களுக்குள் ஒரு தீர்வை முன்வைத்திருப்பார்.

மகிந்த ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த தடையுத்தரவு அடுத்த வருடம் வரை நீடித்துள்ளமையினால் தற்போதைய அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. இதற்கு நீதிமன்றமும், ஐக்கிய தேசிய கட்சியினருமே பொறுப்பு கூற வேண்டும்.

இதேவேளை. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு உயர்நீதிமன்றம் ஒரு தீர்வினை குறித்த தினத்தில் பிறப்பித்திருந்தால் ஜனாதிபதி கடந்த செவ்வாய்கிழமை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மநாட்டில் ஒரு வாரத்திற்குள் அரசியல் நெருக்கடிகள் அனைத்திற்கும் தீர்வை தருவதாக குறிப்பிட்டமை போல ஒரு சிறந்த தீர்வை வழங்கியிருப்பார் என்றும் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இதற்கிடையில் இன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியினர் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவான பிரேரணையை கொண்டுவந்தனர். இதில் 117 வாக்குகளால் அவர் தனது பெரும்பான்மையை நிரூபித்திருந்தார்.

எனினும் இந்த வாக்கெடுப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இந்த நாடாளுமன்றமானது சட்டவிரோதமானது என்றும் மகிந்த தரப்பினர் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் கொழும்பு அரசியலானது மேலும் சிக்கலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது தவிர, அது முடிவைப் பெறுவதாக இல்லை என்பதை உறுதியாக நம்ப முடிகிறது.

எதுவாயினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சவாலான நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி செய்து கொண்டிருக்கிறது. இது அடுத்த சில நாட்களில் மேலும் தீவிரமடையும் என்பதை இப்போதே அறுதியிட்டுக் கூறிவிட முடியும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு