எழுத்துமூல நிபந்தனைகளை பெறுவதாக புலுடா விட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு, எந்த நிபந்தனையும் இல்லாமல் ஐ.தே.கட்சிக்கு ஆதரவு..

ஆசிரியர் - Editor I
எழுத்துமூல நிபந்தனைகளை பெறுவதாக புலுடா விட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு, எந்த நிபந்தனையும் இல்லாமல் ஐ.தே.கட்சிக்கு ஆதரவு..

ரணில் விக்கிரமசிங்கவை ஆதாிப்பதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. நாட்டின் ஸ்த்திர தன்மையி னை கருதியே நாங்கள் இந்த ஆதரவினை வழங்கியிருக்கிறோம். என தமிழ்தேசிய கூட்டமைப்பு கூறியுள்ளது. 

ரணில் விக்கிரம சிங்க மீதான நம்பிக்கை பிரேரணை இன்று சபையில் நிறைவேற்றப்பட்டதை தொடா்ந்து சபையில் உரையாற்றும்போதே தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனா். 

இதன்போது மேலும் அவா்கள் கூறுகையில், 

அரசாங்கத்தின் பங்காளிகளாக இணையாமல் எதிா்கட்சியாக இருந்து கொண்டு ஆதரவு வழங்குவது என்ற இணக்கப்பாட்டின் அடிப்படை யில் ரணிலுக்கு ஆதரவளித்துள்ளோம். 

மேலும்,  இந்த முடிவின்போது எந்தவொரு முன் நிபந்தனையையும் நாம் முன்வைக்கவில்லை. நாட்டின் ஸ்திரத்தன்மையை யோசித்தே இந்த முடிவை எடுத்துள்ளோம். 

இருந்தபோதும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சகல தரப்பினரிடமும் கலந்துரையாடியிருந்தோம். ஐக்கிய தேசிய முன்னணியிடமும் இது பற்றிக் கலந்துரையாடினோம். 

இன்று ரணில் விக்ரமசிங்கவின் உரையில் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதகாவும், பிரிக்கப்படாது பிளவுபடுத்த முடியாத நாட்டுக்குள் அரசியல் தீர்வொன்றை முன்வைப்போம் தெளிவாகக் கூறியிருந்தார் எனவும் கூட்டமைப்பினர் இதன்போது தெரிவித்தனர்.







காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு