ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் வெற்றி.. த.தே.கூட்டமைப்பு ஆதரவு.

ஆசிரியர் - Editor I
ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் வெற்றி.. த.தே.கூட்டமைப்பு ஆதரவு.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு பாராளுமன்றத்தில் நம்பிக்கை இருப்பதாக தெரிவிக்கும் பிரேரணை பெரும்பான்மை வாக்குகளுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு ஆதரவாக 117 வாக்குகள் கிடைத்திருந்தன. 

இந்த வாக்கெடுப்பின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் ஆதரவாக வாக்களித்ததுடன், மக்கள் விடுதலை முன்னணியில் உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. 

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று (12) பகல் 1 மணிக்கு ஆரம்பமானது. 

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் இந்த பிரேரணையை சமர்பித்திருந்ததுடன், மங்கள சமரவீர ஆமோதித்து வழிமொழிந்தார். 

எவ்வாறாயினும் இன்றைய பாராளுமன்ற அமர்வினையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர் புறக்கணிக்கனித்திருந்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு