பன்னாட்டு மனித உாிமைகள் தினமான இன்று மனித உாிமைகளை வலியுறுத்தி நடைபவனி..

ஆசிரியர் - Editor I
பன்னாட்டு மனித உாிமைகள் தினமான இன்று மனித உாிமைகளை வலியுறுத்தி நடைபவனி..

பன்னாட்டு மனித உரிமைகள் தினமான இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் அடையாள நடைபவணி ஒன்று நடாத்தப்பட்டது. யாழ்ப்பாண மனித உரிமைகள் முதலுதவிச் சங்கத்தினரும், இலங்கை சமாதானப் பேரவையுடன் இணைந்து பன்னாட்டு மனித உரிமைகள் தினத்தில் யாழ்ப்பாணம் நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் நிகழ்வென்றினை ஏற்பாடு செய்திருந்தனர். 

இந்நிகழ்விற்கு யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட், யாழ்.பிராந்திய மனித உரிமைக்குழு ஆணையாளர் ரி.கனகராஜ், பேராசிரியர் ம.பெ.மூக்கையா, பொலிஸ் அத்தியட்சகர் பி.யு.உடுகம, இலங்கை எதிலியர் மறுவாழ்வுக்கழகத் தலைவி சி.சூரியகுமாரி ஆகியோர் விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். 

இவ்வாறு அழைக்கப்பட்ட விருந்தினர்களுடன் நல்லூர் ஆலய முன்றலில் இருந்து மனித உரிமையை பிரகடணப்படுத்தும் பதாகைகளை தாங்கியவாறு ஊர்வலகமாக வந்தது துர்க்காதேவி மண்டபத்திற்குச் சென்று நிகழ்வினை ஆரம்பித்திருந்தனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு