நீதிமன்ற தீா்ப்பை ஏற்றுக் கொள்வேன். நடப்பது எனக்கும் ரணிலுக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்சினை அல்ல..

ஆசிரியர் - Editor I
நீதிமன்ற தீா்ப்பை ஏற்றுக் கொள்வேன். நடப்பது எனக்கும் ரணிலுக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்சினை அல்ல..

நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்வதோடு – அந்த தீர்ப்புக்கமைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘தனிநபர் என்ற வகையில் அரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் தொடர்பில் நான் மகிழ்ச்சியடையவில்லை. வலுவான ஜனநாயக முறைமையுள்ள நாட்டில் அவ்வாறு இடம்பெறக்கூடாதெனத் தெரிவித்த ஜனாதிபதி 

வெகுவிரைவில் இந்த நிலைமை மாற்றமடைந்து பிரதமர் மற்றும் அமைச்சரவையுடன் இணைந்து பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுமெனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

பிரதமர் மற்றும் அமைச்சரவை இன்றி செயற்படும் நாட்டில் ஜனாதிபதி என்ற வகையில் கடந்த சில தினங்களாக நான் மிகுந்த பொறுப்புடனும் பொறுமையுடனும் செயலாற்றி வருகின்றேன்.

தற்போது நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடியை அரசியல் கட்சிகளுக்கிடையிலான பிரச்சினையாகவும் எனக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்குமிடையிலான பிரச்சினையாகவும் விவரிக்க பலரும் முயற்சித்து வருகின்றனர்.

இந்த பிரச்சினை சுதேச சிந்தனைக்கும் வெளிநாட்டு சிந்தனைக்குமிடையிலான மோதல் ஆகும் .அந்நிய தேச சக்திகளுக்கு கீழ்படியாமல் சுயமாக எழுச்சி பெற முயலும்போது அந்நிய தேச சக்திகள் அதற்கு சவாலாக அமைந்திருக்கின்றன.

இதனை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாட்டை நேசிக்கும் அனைத்து மக்களும் நாட்டின் நன்மை கருதி சரியான முடிவுகளை எடுப்பார்கள் என நம்புகின்றேன்.

‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தினூடாக 2018 ஆம் ஆண்டிற்கான வாழ்வாதார அபிவிருத்திக்கான கருவிகளை வழங்குவதற்காக பொலன்னறுவை றோயல் கல்லூரியில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

294 மில்லியன் ரூபா செலவில் 4500 பயனாளிகளுக்கு நன்மைகள் வழங்கும் வகையில் இந்நிகழ்வு ஜனாதிபதி ஆரம்பமானது..

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரத்ன பொலன்னறுவை நகர பிதா சானக்க சிதத் ரணசிங்க உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு