ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் புகாா் செய்ய ஐ.தே.கட்சி தீா்மானம்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் புகாா் செய்ய ஐ.தே.கட்சி தீா்மானம்..

விலை அதிகரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கின்றனரா என்ற கேள்வி எழுந்துள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

சுதந்திர சதுக்கத்தில் நேற்று இடம்பெற்ற அமைதியான போராட்டம் ஒன்றில் கலந்துக்கொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச அரசியல் ரீதியாக சில நன்மைகளை செய்திருந்தார். அவர் தற்போது செய்யும் நடவடிக்கைகளால், அவர் செய்த சிறிய நன்மைகளுக்கும் மதிப்பு இல்லாமல் போய்விடும்.

மகிந்த ராஜபக்ச முற்றாக அரசியல் அகதியாக மாறி வருகிறார். இதனால், அவர் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது.

மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர்களை பணத்தை கொடுத்து வாங்க முயற்சித்தார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகிறார் என்றால், விசாரணை ஒன்றை நடத்த வேண்டும்.

இது குறித்து நாங்கள் திங்கட்கிழமை இலஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய உள்ளோம் எனவும் ஆசு மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய சிக்கலான நிலைமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் விலைகள் அதிகரித்தமையோ காரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பல மில்லியன் ரூபாய்களுக்கு விலை பேசப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முடியாத காரணத்தினால், 

மகிந்த ராஜபக்சவுக்கு 113 பெரும்பான்மை கிடைக்கவில்லை எனவும் கிடைத்திருந்தால், இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு