இலங்கை வருகிறாா் பிாித்தானிய வெளிவிவகார அமைச்சா்..

ஆசிரியர் - Editor I
இலங்கை வருகிறாா் பிாித்தானிய வெளிவிவகார அமைச்சா்..

இலங்கை நிலைமைகள் குறித்து கண்டறிந்து கொள்வதற்கு பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

எதிர்வரும் ஆண்டின் ஆரம்பத்தில் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் இலங்கை விஜயம் செய்ய உள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றில் உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார் என தெற்கின் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எப்போது இந்த உரை நிகழ்த்தப்பட்டது என்பது பற்றிய விவரங்களை ஊடகம் வெளியிடவில்லை.

மேலும் நாடாளுமன்றில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென இலங்கையை எச்சரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்த தினந்தோறும் அரசியல் பிரமுகர்களுடன் சந்திப்புக்களை நடத்தி பேசி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இதுவரையில் தனது அதிகாரபூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு