நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதிக்க அதிகாரம் இல்லை. நிதிமன்றில் கே. கனகேஸ்வரன் வாதம்..

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதிக்க அதிகாரம் இல்லை. நிதிமன்றில் கே. கனகேஸ்வரன் வாதம்..

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு சட்டத்தில் விதிவிலக்கு வழங்கப்படுவதைக்கொண்டு அவரின் செயல்களுக்காக அதனை பயன்படுத்தமுடியாது என்று உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக இடம்பெற்று வரும் வழக்கு விசாரணையின்போது நேற்று மனுதாரரான ஆர்.சம்பந்தனின் சார்பில் வாதிட்டபோது ஜனாதிபதி சட்டத்தரணி கே. கனகேஸ்வரன் இதனைக் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 10 மனுக்கள் தொடர்பிலேயே வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்தநிலையில் பிரதிவாதிகளால் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் தாம் முரண்பட்ட வாதங்களை முன்வைக்கவில்லை என்றும் கனகேஸ்வரன் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பாக அரசியலமைப்பின் தமிழ், ஆங்கில மொழிப்பதங்களை காட்டிலும் சிங்கள மொழியில் மாற்றுக்கருத்துக்கள் முன்வைக்கப்படவில்லை என்பதையும் அவர் சுடடிக்காட்டினார்.

எனவே அரசியலமைப்பு சபையை கலைப்பதற்கு நிறைவேற்று துறைக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் வாதிட்டார்.

நாடாளுமன்றத்தை கலைத்தமையானது, சர்வதேசத்தில் அரசியல் அமைப்பை மீறிய செயலாகும் என்றும் அவர் வாதிட்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு