நாடாளுமன்றம் கலைப்புக்கு எதிரான இடைக்கால தடையுத்தரவு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது..

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்றம் கலைப்புக்கு எதிரான இடைக்கால தடையுத்தரவு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது..

ஜனாதிபதியால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை ரத்துச் செய்யக் கோரி முன்வைக்கப்பட்ட மனுவின் அடிப்படையில், அதற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த தடையை மேலும் நீடிப்பதாக உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்னது.

அதற்கமைய எதிர்வரும் 8ஆம் திகதி வரை இந்த தடை நீடிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றில் இடம்பெற்று வரும் வழக்கு விசாரணை மீண்டும் நாளை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு