யாழ்.போதனா வைத்தியசாலையில் திருட்டில் ஈடுபட்ட பெண் திருட்டு நகைகளை விற்பனை செய்த கடையினை அடையாளம் காட்டினாா்..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் திருட்டில் ஈடுபட்ட பெண் திருட்டு நகைகளை விற்பனை செய்த கடையினை அடையாளம் காட்டினாா்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் வைத்தியா்கள்போல் வேடமிட்டு கொள்ளையில் ஈடுபட்டுவந்த பெண்கள் பொலிஸாாிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் கொள்ளையிட்ட நகைகளை விற்பனை செய்த நகை கடையினையும் குறித்த பெண் பொலி ஸாருக்கு அடையாளம் காட்டியுள்ளாா். 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்கள்போன்று வேடமிட்டு கையில் வைத்தியர்கள் வழமையாக பயன்படுத்தும் இதயத் துடிப்பு காட்டியுடன் இரு பெண்கள் சந்தேகத்திற்கு இடமாக நடமாடியதுடன், மற்றுமோர் பெண் கைக் குழந்தையுடன் ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டவேளை 

காவலர்களின் பொறுப்பு உத்தியோகத்தரால் இனம் கானப்பட்டு பிடிக்கப்பட்டார். இவ்வாறு பிடிபட்டவர் ஏற்கனவே வைத்தியசாலையில் களவாடியபோதும் மறைகாணியில் அகப்பட்டிருந்தார். தற்போது  அது தொடர்பான விபரங்களை அறிந்தபோது பல திருட்டில் ஈடுபட்டதனை ஒப்புக்கொண்டவேளையில் 

நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தார். அவ்வாறு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட பெண்மணியிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணைநின்போது களவாடிய நகையினை ஓர் நகை கடையில் விற்பனை செய்த்தாக கூரியதனையடுத்து 

பொலிசார் நேரில் அழைத்துச் சென்று குறித்த நகை கடையில் விசாரணையில் ஈடுபட்டனர். இதனையடுத்து விற்பனை செய்த நகைகளை உரிய முறையில் சிட்டைகள் , பதிவுகள் இன்றி கொள்வனவு செய்யப்பட்டிருப்பதனை பொலிசார் கண்டறிந்த்தோடு உண்மையான சந்தைப் பெறுமதியிலும் கொள்வனவு செய்யப்படவில்லை. 

எனச் சுட்டிக்காட்டியதனையடுத்து அவ்வாறு கொள்வனவு செய்த திருட்டு நகையினை உடனடியாகவே நகை கடை உரிமையாளர் மீளக் கையளித்தார். பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு