மைத்திரி- மஹிந்தாவுக்கு சவால் விடுக்கும் ரணில்..

ஆசிரியர் - Editor I
மைத்திரி- மஹிந்தாவுக்கு சவால் விடுக்கும் ரணில்..

பிரதமருக்கான நிதி ஒதுக்கீட்டை இரத்துச் செய்வது தொடர்பான யோசனை தொடர்பான வாக்கெடுப்பில் பெரும்பான்மை பலம் இருந்தால் யோசனையை தோற்கடிக்குமாறு சவால் விடுத்துள்ள ஐக்கிய தேசிய முன்னணியின் 

தலைவர் ரணில் விக்ரமசிங்க, பெரும்பான்மை இல்லாவிட்டால் அதற்கு தடையேற்படுத்த முயற்சிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கையில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளதால், அமைச்சரவை தானாகே கலைந்துள்ளது என்பதால், பிரதமருக்கு நிதியை ஒதுக்க முடியாது என கொண்டு வரப்பட்டுள்ள யோசனை தொடர்பான சவாலை ஏற்குமாறும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்திலும் நாட்டிலும் தான் உட்பட தமது முன்னணிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாகவும் இதனால், எந்த சவாலையும் எதிர்கொள்ள தயார் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு