தமிழ் மக்களுக்கும் எதிர்கட்சி தலைவர் பதவிக்கும் சம்மந்தம் இல்லையா? பதவியை காப்பாற்ற நினைக்கிறார் சம்மந்தன்..

ஆசிரியர் - Editor
தமிழ் மக்களுக்கும் எதிர்கட்சி தலைவர் பதவிக்கும் சம்மந்தம் இல்லையா? பதவியை காப்பாற்ற நினைக்கிறார் சம்மந்தன்..

தமிழ் மக்களுக்கும் எதிர்கட்சி தலைவர் பதவிக்கும் சம்மந்தம் இல்லை. என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் கூறுவது தனது பதவியை பாதுகாப்பதற்கும், அதன் ஊடாக சுகபோகங்களை அனுபவிப்பதற்குமேயாகும். 

மேற்கண்டவாறு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் கூறியுள்ளார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று மாலை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனிடம் மூன்றரை வருடங்கள் எதிர்கட்சி தலைவர் பதவியை வைத்திருந்து தமிழ் மக்களுக்கு என்ன சாதித்தீர்கள் என ஊடகவியலாளர் 

ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இரா.சம்மந்தன் அந்த பதவிக்கும் தமிழ் மக்களுக்கும் அல்லது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் சம்மந்தம் இல்லை. எனக் கூறியுள்ளார். அவருடைய இந்த கருத்து அபத்தமானது. 

இரா.சம்மந்தன் அவ்வாறான கருத்தினை கூறுவது பேரினவாதிகளை திருப்திப்படுத்துவதற்கும், அதன் ஊடாக தமது பதவிகளை பாதுகாத்து அந்த பதவிகள் ஊடாக கிடைக்கும் சுகபோகங்களை அனுபவிப்பதற்குமேயாகும். 

மேலும் அவ்வாறான பதில் ஊடாக தாங்கள் கடந்த மூன்றரை வருடங்களில் தமிழ் மக்களுக்கு ஒன்றையுமே செய்யவில்லை என்பதை மூடி மறைப்பதற்குமே முயற்சிக்கப்படுகின்றது. மேலும் ஐ.தே.கட்சிக்கு அல்லது ரணில் விக்கிரம சிங்கவுக்கு பிரச்சினை என்றவுடன் 

இன்று நாடாளுமன்றில் கூச்சலிடுகிறார்கள். நீதிமன்றுக்கு செல்கிறார்கள். நாங்கள் கேட்கிறோம் போருக்கு பின்னரான 9 வருடங்களில் தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார்கள். குறிப்பாக காணி பிரச்சினை, 

சிங்கள குடியேற்ற பிரச்சினை, அரசியல் கைதிகள் பிரச்சினை, காணாமல்போனவர் பிரச்சினை என பல பிரச்சினைகளை சந்தித்தார்கள், இன்றும் சந்தித்து கொண்டிருக்கின்றார்கள். அவற்றுக்காக இந்த தமிழ்தேசிய கூட்டமைப்பு இதுவரையில் 

ஒரு தடவையாவது நாடாளுமன்றில் இன்று பேசுவது போல் பேசியிருக்கின்றதா? இன்று ரணில் விக்கிரம சிங்கவை காப்பாற்றுவதற்கு நீதிமன்றம் சென்றதுபோல் நீதிமன்றம் சென்றுள்ளதா? ஆகவே ரணில் விக்கிரமசிங்க என்ற தனி நபரை காப்பாற்றுவதற்கே தமிழ்தேசிய கூட்டமைப்பு 

துடித்துக் கொண்டிருக்கின்றது. அதன் ஊடாக அவர்கள் எதிர் கட்சி தலைவர் பதவி, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் பதவி போன்றவற்றை பாதுகாத் துக் கொண்டு அதன் ஊடாக கிடைக்கும் சுகபோகங்களை அனுபவிக்க நினைக்கிறார்கள் என்றார். 

Radio
×