பிரித்தானிய தூதுவர் மீது குற்றச்சாட்டு, இலங்கை விவகாரங்களில் தலையிடுகிறாராம்.

ஆசிரியர் - Editor I
பிரித்தானிய தூதுவர் மீது குற்றச்சாட்டு, இலங்கை விவகாரங்களில் தலையிடுகிறாராம்.

வியானா ஒப்பந்தத்தை மீறி இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ் செயற்படுவதாக தொழிலாளர்களுக்கான தேசிய முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. 

கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதன் மூலம் தொழிலாளர்களுக்கான தேசிய முன்னணியின் தலைவர் அனுருத்த பாதெனிய இதனை தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ் தன்னுடைய எல்லைகளை மீறி இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதாகவும் அவர் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

வியானா ஒப்பந்தத்தின் அடிப்படையில் தூதுவர்களுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் வரையரை இருப்பதாகவும் குறித்த கடித்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்ந்தும் இவ்வாறான செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட வேண்டாம் எனவும் குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு