தமிழ் மக்கள் பேரவையிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் ஆகிய கட்சிகளை உடன் வெளியேற்றுங்கள். விடாப்பிடியாக நின்றாரா கஜேந்திரகுமார்..?

ஆசிரியர் - Editor I
தமிழ் மக்கள் பேரவையிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் ஆகிய கட்சிகளை உடன் வெளியேற்றுங்கள். விடாப்பிடியாக நின்றாரா கஜேந்திரகுமார்..?

தமிழ் மக்கள் பேரவையில் இருந்து புளொட், ஈ.பீ.ஆர்.எல்.எவ் கட்சிகள் கண்டிப்பாக வெளியேற்றப்பட்டே ஆக வேண்டும். என நேற்றைய மத்திய குழுக் கூட்டத்தில் கஜேந்திகுமார் பொன்னம்பலம் விடாப்பிடியாக இருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்காவிற்கு ஆதரவளிக்கிறது.  என்ற விமர்சனத்தை முன் வைக்கும் ஈ.பீ.ஆர்.எல்.எவ் கட்சியும் ஆதரவை வழங்குகின்றது. அதற்கும் அப்பால் உள்ளூராட்சி மன்றத்தில் கூட்டமைப்பு வெளியில் இருந்து தேசிய கட்சிகளின் ஆதரவினைப் பெற்றதே தவறு 

என விமர்சனம் செய்யப்படும் நிலையில் ஈ.பீ.ஆர்.எல்.எவ் கட்சி தேசிய கட்சியுடன் ஆட்சியை பங்கு போட்டுள்ளது. எனவே தமிழ் மக்கள் பேரவையில் ஈ.பீ.ஆர்.எல்.எவ்வும் இருக்க முடியாது. இது தொடர்பில் பேரவை இரட்டை நிலைப்பாடு அன்றி உறுதியான முடிவினை எடுத்தே  ஆக வேண்டும். என தெரிவித்தமையினையடுத்து கடும் தர்க்கம் நிலவியது. 

இதன்போது ஈ.பீ.ஆர்.எல்.எவ் கட்சி சார்பில் பங்குகொண்டிருந்த சர்வேஸ்வரனால் போதிய பதிலளிக்கமுடியாது தடுமாறினார். இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அடுத்த கூட்டத்தில் ஈ.பீ.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் 

கலந்துகொண்டு தமது தரப்பு நியாயம் மற்றும் நிலைப்பாட்டினை தெரிவித்த பின்பு இதுதொடர்பான இறுதி முடிவினை எட்ட முடியும். அதுவரை இவ்வாடயத்தை ஒத்திவைக்கலாம் எனத் தெரிவித்து விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு