யாழ்.மாநகரசபை பணத்தில் துவிச்சக்கர வண்டி வாங்கி கொடுத்த ஈ.பி.டி.பி, சிக்கினார் முன்னாள் மாநகர முதல்வர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபை பணத்தில் துவிச்சக்கர வண்டி வாங்கி கொடுத்த ஈ.பி.டி.பி, சிக்கினார் முன்னாள் மாநகர முதல்வர்..

யாழ்ப்பாணம் மாநகர சபை ஈ.பீ.டீ.பி ஆட்சியில் இருந்த காலத்தில் முன்னாள் முதல்வர்வர் சபைநிதியில் இருந்து பணம் முற்பணமாக எடுத்து கட்சித் தலைவரின் பணிக்கு வழங்கியமை கண்டறியப்பட்டுள்ளது.

ஈ.பீ.டீ.பியின் ஆட்சியில் யாழ்ப்பாணம் மாநகர சபை நிர்வாகம் இருந்த காலத்தில் முதல்வராக இருந்த திருமதி.யோகேஸ்வரி - பற்குணராசா சபை நிதியில் தனது பெயரில் முற்பணமாக 

பெற்று 56 துவிச்சக்கர வண்டிகள் கொள்வனவு செய்து அதனை கட்சியின் தலைவர் ஊடாக விநியோகம் செய்துள்ளார். குறிப்பாக 2011ம் ஆண்டு 9ம் மாதம் இடம்பெற்ற மாதாந்த கலந்துரையாடலில் 

பிரஸ்தாபிக்கப்பட்டு 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் குறித்த முற்பணத்தை அப்போதைய மாநகர முதல்வர் திரிமதி.யோகேஸ்வரி- பற்குணராயா 5 லட்சத்து 49  ஆயிரம் ரூபா முற்பணமாக பெற்றுள்ளார். 

என்பதே கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு முற்பணமாக பெறப்பட்ட பணத்தினை மீளச் செலுத்துமாறு கடந்த செப்ரெம்பர் 21ம் திகதிய கடிதம் மூலம் மேற்படி பணத்தொகையினை 

மீளச் செலுத்துமாறு முதல்வர் ஆனல்ட் எழுத்து மூலம் கோரியுள்ளார்.  இவ்வாறு முதல்வரினால் அனுப்பி வைக்கப்பட்ட கடித்த்தினையடுத்து முன்னாள் முதல்வரும் தற்போதைய உறுப்பினருமான 

திருமதி.யோகேஸ்வரி - பற்குணராயா முழுப் பணத்தினையும் இரண்டு மாதகால அவகாசத்தில் மீளச் செலுத்துவதாக ஒக்டோபர் 10ம் திகதி வழங்குவதாக எழுத்தில் வழங்கியுள்ளார்.

இதேநேரம் குறித்த முற்பணத்தில் 50 துவிச்சக்கர வண்டிகள் கொள்வனவு செய்யப்பட்டு அரசியல் ரீதியில் விநியோகிக்கப்பட்டதாகவே கூறப்படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு