புதிய பிரதமராக சஜித் பிரேமதாச நியமிப்பு?

ஆசிரியர் - Editor I
புதிய பிரதமராக சஜித் பிரேமதாச நியமிப்பு?

நாளை பிரதருக்கு எதிராக  நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற அனுமதித்தால்

பிரதமர் பதவியினை விட்டுக்கொடுக்கத் தயார் என்று ரணில் தெரிவித்துள்ளதாக அறியமுடிகிறது.

அதற்கமைவாக புதிய பிரதமராக சஜித் பிரேமதாச நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்த மற்றும் அவரது அமைச்சரவையினை கலைக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டுடன் ரணில் உள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதன் பிரகாரம் ஜக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் என்ற அடிப்படையில் சஜித் பிரேமதாசவை பிரதமராக்க ரணில் சம்மதித்துள்ளார்.

இந்த முடிவை மைத்திரியும் ஏற்றுக்கொண்டதனையடுத்தே பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதாக கொழும்பு ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு