ஜனாதிபதி தலமையிலான கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டேன். சபாநாயகா் கரு அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி தலமையிலான கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டேன். சபாநாயகா் கரு அறிவிப்பு..
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை கூட்டியுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் தான் கலந்துக்கொள்ள போவதில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்று முற்பகல் நடந்த கலந்துரையாடலில் சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளதாக சபாநாயகரின் செயலகம் கூறியுள்ளது.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றத்தில் கடந்த சில தினங்களாக நடந்த அரசியல் பதற்றம் மற்றும் மோதலான நிலைமையை முடிவுக்கு கொண்ட வந்து, நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளை வழமையான முறையில் முன்னெடுத்துச் செல்லும் தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

அரசியல் கட்சிகள் இடையில் இணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ஏற்பாடு செய்துள்ள இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், சபாநாயருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தான் கலந்துக்கொள்ள போவதில்லை என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியும் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துக்கொள்ள போவதில்லை என அறித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு