மைத்திாி- மஹிந்தவின் சதி புரட்சியால் வெளிநாட்டு முதலீடுகள் மீள பெறப்படுகிறது..

ஆசிரியர் - Editor I
மைத்திாி- மஹிந்தவின் சதி புரட்சியால் வெளிநாட்டு முதலீடுகள் மீள பெறப்படுகிறது..

கொழும்பு பங்குச் சந்தை உட்பட இலங்கை முதலீட்டுச் சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டிருந்த வெளிநாட்டுப் பணம் துரிதகதியில் திரும்ப பெறப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சூழ்ச்சிகரமான முறையில் நடந்த அரசியல் அதிகார மாற்றம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான ஆட்சி அதிகாரம் கொண்ட நாட்டுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவது தொடர்பாக ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக 

நிதிச் சந்தையில் உள்ள வெளிநாட்டு முதலீடுகள் திரும்ப பெறப்பட்டு வருவதாகவும், அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சதித்திட்ட அரசாங்கம் தவறியுள்ளதாகவும் மங்கள குற்றம் சுமத்தியுள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ள மங்கள சமரவீர,

கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நவம்பர் ஒன்பதாம் திகதி வரையான காலப்பகுதியில் 28.8 பில்லியன் ரூபாய் வெளிநாட்டு முதலீட்டை நாடு இழந்துள்ளது.

இது 165 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மங்கள சமரவீர தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.


Foreign investors have rapidly sold out of #SriLanka stock market & debt markets. In just weeks of the illegal regime, Rs. 28.8 billion (US$ 165 M) was withdrawn by foreign investors as they lost confidence in economic management of the regime. #endcouplk #ConstitutionalCrisisLK pic.twitter.com/cHgG0dPJsy

— Mangala Samaraweera (@MangalaLK) November 17, 2018

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு