முன்னாள் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்த கம்பறலிய திட்டத்தை உடன் நிறுத்துங்கள். ஜனாதிபதி பணிப்பு..

ஆசிரியர் - Editor I
முன்னாள் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்த கம்பறலிய திட்டத்தை உடன் நிறுத்துங்கள். ஜனாதிபதி பணிப்பு..

முன்னாள் பிரதமரால் தொகுதிக்கு 200 மில்லியன் வேலைத்மிட்டமான கம்பறலிய திட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் அன்றி ஏனையவற்றை செயல்படுத்த வேண்டாம் என மாவட்டச் செயலாளர்களிற்கு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனா பணிப்புரை விடுத்தார்.

இலங்கையின் 25 மாவட்டச் செயலாளர்களையும் நேற்றைய தினம் தனது மாளிகைக்கு அழைத்த அரச தலைவர் தற்போது இடம்பெறும் திட்டஙகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார் . இதன்போதே மேற்படி உத்தரவினையும் பிறப்பித்தார்.

இதன்போது அரச தலைவர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,

நாட்டில் அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றம் காரணமாக மாவட்டங்களிற்கும் அனுமதிக்கம்பட்ட திட்டங்களில் தடைகள் ஏற்படின் உடன்  தொடர்புகொண்டு பணியை சீர் செய்ய வேண்டும். சில அமைச்சுக்களிற்கு அமைச்சர் இல்லை என்றோ அல்லது எந்த வகையான இடையூறுகள் ஏற்படுனும் தொடர்புகொள்ள முடியும்.

இதே நேரம் திட்டங்களிற்கு அனுமதிக்கப்பட்ட நிதியினை விடுவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இருப்பினும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரம சிங்காவின் அமைச்சினால் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்ட கம்பறலிய திட்டத்தினை இடை நிறுத்துங்கள் . இருப்பினும் ஏற்கனவே சில திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பின் அப் பணிகளை மட்டும் முன்னெடுத்து பணியை நிறைவுறுத்துங்கள். 

அவ்வாறு எஞ்சிய பணியை முன்னெடுக்க வேண்டாம். அவற்றிற்குரிய நிதிகள் கிடைக்காது. இதேநேரம் நாட்டின் அரசியல் குழப்பங்கள் தொடர்பில் திட்டங்கள் பாதிப்படையாது முன்னெடுக்கலாம். என மாவட்டச் செயலாளர்களிடம் தெரிவித்ததோடு எந்த எந்த மாவட்டத்தில் கம்பறலிய தவிர்ந்த ஏனைய திட்டங்களில் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன என்ற விபரங்களவயும் கேட்டறிந்துகொண்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு